அமித் ஷா, ந தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

டெல்லியில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந் தித்து மின் திட்டங்களுக்கான அனு மதி, நிலக்கரி ஒதுக்கீடு குறித்து கோரிக்கை விடுத்தனர். தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் நேற்று டெல்லி சென் றனர். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுப்பிக் கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சர்களை சந் தித்த மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தொய்வின்றி விநியோகிக்கத் தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும், சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 660 மெகாவாட் விரிவாக்கத் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் நடந்துவரும் குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகிய வற்றுக்கான பணிகள் தாமத மின்றி தொடர, சுற்றுச்சூழல் அனுமதியை விரைந்து புதுப் பித்து வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சரிடம் தங்க மணி கோரிக்கை விடுத்தார். மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்தபோது, 'தமிழக மின் நிலையங்களுக்கு நவம்பர், டிசம் பர் மாதங்களுக்கு தினமும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக் கரியும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு தினமும் 71 ஆயி ரம் மெட்ரிக் டன் நிலக்கரியும் வழங்க இந்திய நிலக்கரி நிறு வனங்களிடம் அறிவுறுத்த வேண் டும்' என கோரிக்கை விடுத்தார். 'வடசென்னை அனல் மின் நிலைய திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம், உப்பூர் மற்றும் உடன்குடி அனல்மின் நிலைய திட்டங்களை துரிதப்படுத்த பாரத மிகுமின் நிறுவனத்துக்கு அறிவுறுத்தும்படி மத்திய நிதியமைச்சரிடம் தங்கமணி கோரிக்கை விடுத்தார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)