புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்ட துவக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அந்த விழாவிற்காக செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையும் இடங்களை நேரில் அமைச்சர் ஆர் பி உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் விழா குறித்த ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, கூடுதல் தலைமைச் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் வருகிற 22ம் தேதி தென்காசி புதிய மாவட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சுமார் 5000 பயனாளிகளுக்கு 75 முதல் 100 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என தெரிவித்தார். 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்வர் பழனிச்சாமி எனவும் சீன அதிபர், பாரத பிரதமரை அழைத்து வந்து முதல்வர் பழனிச்சாமி அதிசயங்கள் பல படைக்கிறார் எனவும் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)