டிச.,27, 28ல் உள்ளாட்சி தேர்தல்நடத்த....,

சென்னை: தமிழகத்தில் டிச., 27 மற்றும் 28 ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அதிமுகவும், திமுகவும், கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், டிச., 27 மற்றும் 28 ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், அரையாண்டு தேர்வை முன்னரே முடிக்கும்படி, பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.