அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிர்வகிகள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கட்சியில் அரும்பணி ஆற்றி வரும் கழகத் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றி வரும் கோடி கணக்காண கழக உடன் பிறப்புகளுக்கு பாராட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளில் தலையிடாத ஆட்சி முறையில் பயணிக்க உறுதி, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றி, தமிழ்நாட்டை தொழில் வளமிக்க மாநிலமாக மாற்ற உலக முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மனாம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, உலக தலைவர்கள் ஒன்று கூட சிறந்த இடமாக தமிழகம் விளங்கும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு, தமிழ் நாடு நாள் அறிவிப்பிற்கும், அதனை சிறப்பாக கொண்டாடியமைக்காகவும் தமிழக அரசுக்கு பாராட்டு, இலங்கை தமிழர்களின் உடமைகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல், கீழடி அகழ்வாராய்சியை காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, காவிரி கோதாவரி இணைப்புத்திட்டம், மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தினை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பாராட்டு, இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்த நிதி உதவி அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல், புயல், வெள்ளம், வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மீட்க சிறப்பாகவும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்க அரசுக்கு பாராட்டு, நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த 1600 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு பாராட்டு, ”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ரு போற்றப்படும் வகையில் தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை அதிகரித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டன. மேலும், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு வாழ்த்து, குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் மேம்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி, பிளாஸ்டிக்குகளை ஒழித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விழக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல், பிரசவத்தின் போது தாய்மர்களின் இறப்பு விகிதத்தை வெகுவக குறைத்ததற்கு மத்திய அரசிடம் இருந்து விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கூட்டுறவு அமைப்புகளுக்கு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்த கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு, பதவி ஆசைக்காக அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சி மேற்கொண்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என சூளுரை ஏற்கப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. மொத்தம் 23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னதாக, சாலை விபத்து மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள் 231 பேருக்கு இரங்கல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள்: 1.கட்சியில் அரும்பணி ஆற்றி வரும் கழகத் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றி வரும் கோடி கணக்காண கழக உடன் பிறப்புகளுக்கு பாராட்டு 2.சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி. 3.மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளில் தலையிடாத ஆட்சி முறையில் பயணிக்க உறுதி. 4.விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி. 5.கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றி. 6.தமிழ்நாட்டை தொழில் வளமிக்க மாநிலமாக மாற்ற உலக முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டு. 7.உலக தலைவர்கள் ஒன்று கூட சிறந்த இடமாக தமிழகம் விளங்கும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு. 8.தமிழ் நாடு நாள் அறிவிப்பிற்கும், அதனை சிறப்பாக கொண்டாடியமைக்காகவும் தமிழக அரசுக்கு பாராட்டு. 9.இலங்கை தமிழர்களின் உடமைகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல். 10.கீழடி அகழ்வாராய்சியை காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு. 11.சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி இருக்கும் தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு. 12.காவிரி கோதாவரி இணைப்புத்திட்டம், மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தினை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பாராட்டு. இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்த நிதி உதவி அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல். 13.புயல், வெள்ளம், வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மீட்க சிறப்பாகவும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு. 14.நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த 1600 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு பாராட்டு. 15.”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று போற்றப்படும் வகையில் தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை அதிகரித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு. 16.110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு வாழ்த்து. 17.குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகளை மேம்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி. 18.பிளாஸ்டிக்குகளை ஒழித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு. 19.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல். 20.பிரசவத்தின் போது தாய்மர்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்கு மத்திய அரசிடம் இருந்து விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு. 21.கூட்டுறவு அமைப்புகளுக்கு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்த கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு. 22.பதவி ஆசைக்காக அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சி மேற்கொண்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம். 23.உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என சூளுரை. இந்த 23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு