திமுக பொதுக்குழு கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரசியலமைப்பு சட்டத்தின் பண்புகளை சிதைக்கும் செயல்பாடுகளை, ஒருபோதும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்பன உட்பட திமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடியது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அரசியல் சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அரசியல் சட்ட சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார். அடிப்படை பண்புகளுக்கு ஊறு விளைவிக்காமல் அரசியல் சட்டத்தை திருத்த முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது, அனைத்து மொழிகளுக்கும் அதிகாரம் அளிப்பது, தேர்தல் வெற்றியின் விகித்தாசாரம் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் ஸ்டாலின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு