வருமான வரி சோதனையின் போது ரூ,2000 நோட்டுகள் பிடிபடுவது குறைந்துள்ளது

நாட்டில் வருமான வரி சோதனையின் போது ரூ,2000 நோட்டுகள் பிடிபடுவது குறைந்துள்ளது. இதே போன்று ரூ.2000 புழக்கமும் நாட்டில் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பார்லி.,யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று நிதியாண்டுகளில், வருமானவரித்துறை சோதனையின்போது, ரூ.5 கோடிக்கும் மேலாக கைப்பற்றப்பட்ட ரொக்கம் தொடர்பான தரவுகள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், உயர் மதிப்புக் கொண்ட ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்படுவது, ஆண்டுக்காண்டு சரிவை சந்திப்பது தெரியவந்துள்ளது. 2017-18 ம் நிதியாண்டில் ரெய்டின் போது பிடிபட்ட ரூ.2000 நோட்டுக்களின் அளவு 67.9 சதவீதமாகவும், 2018-19 ல் 65.9 சதவீதமாகவும் இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் இந்த அளவு 43.2 சதவீதமாக சரிந்துள்ளது என்றார். 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் கடந்த ஆண்டு பாதியாக குறைந்தது. தற்போது ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் 31 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.6.7 லட்சம் கோடியாக இருந்த ரூ.2000 நோட்டுக்களின் எண்ணிக்கை, 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.6.6 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்