நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

நடிகையும், மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவருமான மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் அண்மையில் பேட்டியளித்த நடிகை மீரா மிதுன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாகவும், அதைக் கேட்ட ஓட்டல் ஊழியருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நட்சத்திர விடுதி மேலாளர் அருண் அளித்த புகாரின் அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.