தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று அவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் ரஞ்சன் கோகாய். இவரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது. ஆனால், இன்றும் நாளையும் உச்சநீதிமன்றம் விடுமுறை நாள் என்பதால் ரஞ்சன் கோகாயின் இறுதிப் பணி நாள் மற்றும் பிரிவு உபசரிப்பு விழா நேற்று உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது1954-ம் ஆண்டு அசாம் மாநிலம் திப்ருகார் பகுதியில் பிறந்தவர் ரஞ்சன் கோகாய். இவரின் தந்தை கேசவ் சந்திர கோகோய், வழக்கறிஞராகவும் அசாம் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். தன் தந்தையைப் போலவே ரஞ்சன் கோகாயும் சட்டப் படிப்பு முடித்துவிட்டு 1978-ம் ஆண்டு தன்னை வழக்கறிஞர்கள் சங்கத்தில் இணைத்துக்கொண்டார். கௌஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்ற இவர் 2001-ம் ஆண்டு அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தன் பதவிக்காலத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ளார். அயோத்தி, சபரிமலை, ரஃபேல் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, உலக கவனம் பெற்ற வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இணைந்து வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ரஞ்சன் கோகாயும் ஒருவர். இவரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், நேற்று தன் இறுதிப் பணி நாளை நிறைவு செய்துள்ளார். நேற்று காலை எப்போதும் போல நீதிமன்றத்துக்கு வந்த இவர், ஒரு வழக்கில் நான்கு நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடத்தினார். இதன் பின்னர், பார் கவுன்சில் நீதிபதிகளுக்குத் தனிப்பட்ட கோரிக்கையை முன்வைத்தார். அதில், ' வழக்குகளை விசாரிக்கும்போது நீதிபதிகள் அமைதிகாக்க வேண்டும். நீங்கள் பேசவே கூடாது என்பது என் கருத்தல்ல, தேவைக்கு மட்டும் பேசுவதே அந்த இடத்துக்கான துய்மையைப் பரைசாற்றும் விதமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு இறுதியாக உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த பிரிவு உபசரிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அர்விந்த் பாப்டே, பார் கவுன்சில் நீதிபதிகள், உச்சநீதிமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு, ரஞ்சன் கோகாயை வழியனுப்பிவைத்தனர்.தன் நீதித்துறை வாழ்க்கை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ரஞ்சன் கோகாய், ``ஒரு வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் நான் பணியாற்றிய 40 வருடக்காலத்தில் சட்டத்தின் கம்பீரத்தை மிகவும் நெருங்கிய பகுதிகளிலிருந்து பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. இது என் திறன்கள் மூலம் சேவை செய்யும் பங்களிப்பை வழங்கியது. நீதி வழங்கும் அமைப்பின் அழுத்தமான பிரச்னைகளை தீர்க்க நான் முயன்றேன், அது தொடர்ந்து முன்னேறும் என நான் நம்புகிறேன்உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன், நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தின் இன்றியமையாத தூணாக உள்ளது. இது நாட்டின் பிற பார் சங்கங்களுக்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வேண்டும். இனி நான் இந்த அசாதாரண மற்றும் மிகவும் மரியாதைக்குரிய இடத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன். ஆனால், என்னில் ஒரு பகுதி எப்போதும் அதனுடன் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்