கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து கட்டுக் கட்டாக சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்

ஐதராபாத் : தெலங்கானாவில் போலீசாரிடம் சிக்கிய கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து கட்டுக் கட்டாக சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், ரூ.80 லட்சம் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு உண்மையான ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறிவிட்டு, பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து, இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்து மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் போலீசில் புகார் அளிக்காத நிலையில் ஒருவர் மட்டும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த தகவல்கள் அடிப்படையில் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்தது. கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த வீட்டில் இருந்து ரூ.7 கோடி அளவிற்கு கள்ளநோட்டுகள் முதலில் கைப்பற்றப்பட்டன. பின்னர் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றில் கட்டுக்க கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் புதிய ரூ.2000 நோட்டுகளும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)