தேசிய பத்திரிகையாளர் தினத்தில் டெங்கு காய்ச்சல் பெயரில்...ஊழல்... மாதம் ரூ.100 கோடி போலி பில்... புத்தகம் வெளியிட்டுள்ள மக்கள் செய்தி

ஏற்கனவே மக்கள் ஏமாந்தார்களாஏமாற்றப்பட்டார்களா, கே.டி சகோதரர்கள்கைப்புள்ள ஸ்டாலின், இருளில் தமிழகம்சகாயம் ஐ.ஏ.எஸ். (கிரானைட் ஊழல்), ஐ.ஏ.எஸ்அதிகாரிகளின் சொத்துப்பட்டியல், கனிம வள மாபியா பிடியில் தமிழகம், குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். லீலைகள், மோசடி கட்சிகளுடன் மோடிமும்மூர்த்திகளின் ஊழல் சாம்ராஜ்ஜியம், தமிழக அரசின் ரூ.15,000 கோடி சிக்கிய ஐ.ஏ.எஸ்அதிகாரிகள், கே.டி. சகோதரர்கள் பாகம்-2, தமிழக அரசின் ரூ.50,000 கோடி ஊழல், சின்னையாகரிகாலன் கூட்டுக்கொள்ளை, அதிமுக அரசின் ஒரு இலட்சம் கோடி மெகா ஊழல் ஆகிய பதினைந்து நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் செய்தி மையம்.காம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக அதிகாரிகள் செய்யும் தவறுகள்அரசின் நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகள்தமிழக அரசின் ஊழல்கள், அரசியல் கட்சிகள் செயல்பாடுகள் விமர்சனம் போன்ற செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறோம். தமிழக அரசின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுவதும், நல்லது நடக்கும் போது அதை பாராட்டுவதும் பத்திரிகையாளரின் ஜனநாயக கடமை. அதே போல் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுவதும் பத்திரிகையா ளரின் கடமை தான். அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி யதால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு என் மீது 23 பொய் வழக்கும் போட்டு கைது செய்தது. நான் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டேன். 119 நாட்கள் கோவை மத்திய சிறையில் தனிமை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். 18.12.18-ல் கோவையில் வது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 19.12.18 அன்று மாலை 6.10 மணியளவில் வீட்டுக்கு எதிரே உள்ள மண்சாலையில் நான் சென்று கொண்டு இருந்த போது, கோவையை சேர்ந்த கூலிப்படையினர் என் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மயிரிழையில் உயிர் தப்பினேன்இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறதுதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலில் குழந்தைகள் மகல் பெரியோர் வரை பலர் பலியாகி உள்ளார்ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி என ஆண்டுக்கு ரூ.1200 கோடிக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு என்ற பெயரில் போலி பில் போடப்படுகிறது. ஐந்தாண்டுகளில் மட்டும் ரூ.6000 கோடிக்கு போலி பில் போடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் ஊமல் கொடர்பாக ஆகாரங்களுடன் 19-வது புத்தகம் உங்கள் முன்னால் இருக்கிறது. இந்த புத்தகம் பத்திரிகையாளர் என்ற கோணத்தில் மட்டுமே எழுதப்பட்டு, உங்களிடம் தவழ்கிறது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உள்ள க அதிநவீன அரசு மருத்துவமனையின் தகழிப்பிடங்கள், கிழிந்து போன நோயாளிகள் படுக்கும் கட்டிலில் உள்ள மெத்தைகள், குடி நீர் வராத குடி நீர் தொட்டி புகைப்படங்களை இங்கு வெளியிட்டு உள்ளோம்.. வந்தவாசியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சிகிச்சைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வருகிறார். இந்த மருத்துவமனையில் நுழைந்தாலே டெங்கு காய்ச்சல் தானாகவே வந்துவிடும்.. வந்தவாசி மருத்துவமனையில் சாதாண காய்ச்சலுக்கு கூட செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு மேல்சிகிச்சை என்று பெயரில் அனுப்பிவிடுவார்கள்... நோயாளிகள் படுத்திருக்கும் கட்டில் உள்ள மெத்தைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சமீபத்தில் முதல்வருடன் லண்டன் சென்ற போது, இந்த மெத்தைகளை வந்தவாசி மருத்துவமனைக்கு இறக்குமதி செய்ததாக தெரிகிறது.   தமிழகத்தில் எந்த கட்சி பதவிக்கு வந்தாலும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும், நல்லவைகளை பாராட்டும் பத்திரிகையாளராக பணியை கொடருவதற்கு தமிழக மக்களாகிய உங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் உங்கள் அன்பு பத்திரிகையாளன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்