மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 100 கிராம் தங்கக் கம்பிகள் பறிமுதல்: சுங்க இலாகாவினர் நடவடிக்கை

சிங்கபூரிலிருந்து மதுரை வந்த பயணியிடம் இருந்து ரூ.42 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் எடையுள்ள கடந்தல் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர் . சிங்கபூரிலிருந்து மதுரை வரும் ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து, மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிங்கபூரிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணித்துவந்த விருதுநகர் மாவட்டம் அருப்புகேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் சாகுல் ஹமீது (வயது 32) என்பவரிடம் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அவர் கொண்டுவந்திருந்த ரோலர் சூட்கேஸில் தங்கக் கம்பிகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 100 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூபாய் 42 லட்சம் ஆகும். சாகுல் ஹமீதுவிடமிருந்து கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க இலாகவினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்,