சுவிட்சர்லாந்து வங்கிகளில் சுமார் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் இருக்கும் கணக்குகளின் விவரங்களை கடந்த 2015 ஆண்டு அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டது. இந்த கணக்குகள் அனைத்தும் கடந்த 1955 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாடற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்களின் 10 கணக்குகள் உள்பட மொத்தம் 2600 வங்கிக் கணக்குகளின் விவரங்களை சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டது. இந்த கணக்குகளில் இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் சில கணக்குகளுக்கு பாகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்களின் கணக்குகளுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த கணக்குகளுக்கு உரிமை கோருவதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டோடு நிறைவடைகிறது. இந்த கணக்குகளுக்கு உரிய ஆவணங்களோடு யாரும் உரிமை கோரவில்லையெனில் அந்த பணம் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு சொந்தமானதாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்