பாத்திமாவின் மரணத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்!

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் கல்லூரி வளாகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, பாத்திமா லத்தீப் உயிரிழந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது மகள் பாத்திமாவின் மரணம் தற்கொலை போன்று தெரியவில்லை என தெரிவித்தார். மேலும், தனது மகளின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை செய்தியாளர்களிடையே கேள்வியாக முன் வைத்தார். பாத்திமாவின் மரணத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீப் முன்வைக்கும் 10 கேள்விகள் : 1. எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? 2. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? 3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எவ்வாறு அங்கு கிடைத்தது. 4. இறப்பதற்கு முன்றைய நாள் இரவில் உணவகத்தில் வைத்து 1 மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணவி.? 1 மணி அழுகிறாள் என்றால் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள். 5. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கடந்தது. 6. எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார். 7. தினமும் இரவு 8 மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அழுதிருக்கிறாள் என்றால் அவளுக்கு அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.? 8. எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..? 9. சம்பவம் நடந்த அன்று இரவு 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கும் போது இரவு 9:30 வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார். 10. எனது மகள் மரணத்தில் இதுவரை ஐ.ஐ.டி.யிடமிருந்தது அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐ.ஐ.டி.யின் மாணவர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு