திமுக பொதுக்குழு கூட்டம் நவ.,10ல்-ஸ்டாலின் மடல்

திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள மடல்: நாளைய வெற்றிக்கு கட்டியம் கூறிட நவ., 10ல் பொதுக்குழு கூடுகிறது. வெற்றி பெற்றால் ஆடுவதும், தோல்வியால் துவண்டு போவதும் இல்லை என்பது அண்ணா, கருணாநிதி கற்று தந்த பாடங்கள். உண்மை நிலவரங்களை மறைக்காமல் வளர்ச்சி ஒன்றையே இலக்காக கொண்டு கலந்து ஆலோசிக்க இந்த குழு கூடுகிறது. இதில் இடைத்தேர்தல் தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படும். தலைவராக இருந்தாலும், தொண்டனாகவே என்னை கருதுகிறேன். பொதுக்குழுவில் இயற்றப்படும் தீர்மானங்கள் நாட்டின் ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மடலில் எழுதியுள்ளார்.