நாங்குநேரி ஆய்வாளராக இருந்த சுந்தரநேசன் மற்றும் ஓட்டுநர் ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

நெல்லை மாவட்டம் பள்ளிகொண்டான் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் 2014ஆம் ஆண்டு தனது மகன், மருமகள் இடையேயான குடும்ப பிரச்சினை தொடர்பாக, நாங்குநேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நாககுமாரி விசாரணைக்காக அழைத்ததன் பேரில் காவல் நிலையம் சென்றுள்ளார். விசாரணையின்போது, நாங்குநேரி ஆய்வாளராக இருந்த சுந்தரநேசன் மற்றும் ஓட்டுநர் ரமேஷ் உள்ளிட்ட சிலர் வெள்ளத்துரையின் சட்டையை பிடித்து கீழே தள்ளியதுடன் அவரது மனைவியை கீழே தள்ளி, மகனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பாக வெள்ளத்துரை புகார் மனு அளித்தார். இதனை விசாரித்த ஆணையம், வழக்கில் ஒருவரை கைது செய்யும் முன்பாக உச்ச நீதிமன்ற வழிமுறைகளை முறையாக பின்பற்றாத போலீசார், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தது. காவல் ஆய்வாளர்கள் நாககுமார், நாககுமாரி,சுந்தரநேசன் ஆகியோருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டது. ஆய்வாளர்கள் நாககுமாரி, ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு