உத்தவ் தாக்கரே டிச.1 ல் முதல்வராக பதவியேற்பு.....

மும்பை: மஹா., முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டிச.,1 ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி முன்னிலையில், கடந்த நவ., 23ம் தேதி பாஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்.,சின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். பெரும்பான்மை இல்லாமல் பதவியேற்பு நடந்ததாக சிவசேனா, காங்., தேசியவாத காங்., கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் பட்னவிசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. திடீர் திருப்பமாக போதிய பெரும்பான்மை இல்லாததால் துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். பின், பட்னவிசும் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கோஷ்யாரிடம் வழங்கினார். இதனால், காங்., தேசியவாத காங்., கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று மாலை 7 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக தேசியவாத காங்.,சின் ஜிதேந்திர அவத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.