அரசியலில் திடீர் திருப்பம்: முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்பு

மும்பை: மஹா., அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. முதல்வராக பா..ஜ.,வின் பட்னவிசும், துணை முதல்வராக சிவசேனாவின் அஜித் பவாரும் பதவியேற்று கொண்டார்.. மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, இந்த இரு கட்சிகளுக்கு இடையே யான கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதற்கு சோனியாவும் சம்மதித்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. இதில் ஒரு மித்த முடிவு ஏற்பட்டதாகவும், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மஹா.,அரசியலில், யாரும் எதிர்பாராத தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர்களுக்கு கவர்னர் பகத் சிங் கோஷாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு