பேனர்கள், கொடிகள் வேண்டாம்: கமல்

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கை: பரமக்குடியில் நடக்கும் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் தனக்கு, பேனர்கள், பிளெக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்விசயத்தில் எவ்வித காரணங்களும் ஏற்று கொள்ளப்படமாட்டாது. எந்நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும் கண்டிப்பாக தெரிவித்து கொள்கிறேன். இனி நிகழவிருக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளில் மக்கள் நீதி மையம் கட்சி கொண்டு வர விருக்கும் மாற்றங்கள் நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.