பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், தேர்த்தங்கல் பகுதியில் குவியும் பறவைகளுக்காக அப்பகுதி கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மேலச்செல்வனூர், கீழ செல்வனூர், சித்திரங்குடி மற்றும் தேர்தங்கல் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த பகுதியில் சீசன் காலங்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும், வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து இனப்பெருக்கம் செய்கின்றன. தங்கள் கிராமங்களை தேடி வரும் பறவைகளுக்கு தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் பட்டாசு இல்லா தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.