சென்னையில் இறந்த பெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்.

சென்னை ,காசிமேட்டில் இறந்த பெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு பெண் போலீசார் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஸ்ரீதேவி வயது 48). இவரது கணவர் முருகன். இவர்களுக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீ தேவி உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி பெண் போலீசார் வட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏட்டாக இருந்து இன்ஸ்பெக்டர் வரை பதவி உயர்வு பெற்றஸ்ரீதேவி சக போலீசாரிடம் அன்புடன் பழகுவாராம். இதனால் பெண் போலீசார் வட்டத்தில் ஸ்ரீதேவிக்கு நல்ல பெயர் இருந்தது. இதனால் ஸ்ரீ தேவி மரணம் அடைந்தார் என்பதை கேள்விப்பட்டதும் ஏராளமான பெண் போலீசார் தண்டையார் பேட்டையில் திரண்டனர். பொதுவாக இறுதிச்சடங்கு முடிந்து உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் போது பெண்கள் வரமாட்டார்கள். ஆனால் ஸ்ரீதேவியின் உடலை தகன மேடை வரை பெண் போலீசாரே சுமந்து சென்றார்கள். துணை கமிஷனர் சுபலட்சுமியும் அவர்களுடன் சேர்ந்து தூக்கி சென்றார். குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெறும் அடக்கத்தை விட இதுதான் மிகப்பெரிய கவுரவம், பெருமை என்று பொதுமக்களும் பாராட்டி னார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)