அங்கீகாரம் பெறாத அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கக் கூடாது

அங்கீகாரம் இல்லாத அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாத அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குநரகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அதையடுத்து, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளின் அங்கீகாரம் நிறுத்தப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று குறிப்பிட்ட தொடக்கப்பள்ளி இயக்குநர் சேதுராமவர்மா, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துவது அல்லது காலதாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஊதியத்தை உடனே விடுவிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தினாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு