சீனப்பட்டாசு:விமானங்களில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை:விமானங்களில் தடை செய்யப்பட்ட சீனப்பட்டாசுகள் கடத்தி வரப்படுகிறதா என சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியே முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் மாசுபடுதல் குறையும், அதிகபாதுகாப்பு என்பதால் இதனை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட சீனப்பட்டாசுகள் விற்பனையை தடுக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதிகமாசு ஏற்படுத்தும், பாதுகாப்பு குறைவு, கண் எரிச்சல் ஏற்படும் போன்ற அபாயங்கள் ஏற்படுவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சீனாவில் இருந்து சென்னை வரும் விமானங்களிலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்கத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பயணிகள் உடைமை, சரக்குகள் கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு