பேனர்' தடை காரணமாக, சுவர் விளம்பரங்கள் வரையும் ஓவியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

புதுக்கோட்டை:'பேனர்' தடை காரணமாக, சுவர் விளம்பரங்கள் வரையும் ஓவியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். நிகழ்ச்சி, திருவிழா, அரசு விழா, அரசியல் கூட்டம், சுப காரியங்கள் என எது நடந்தாலும், 'டிஜிட்டல் பேனர்' வைக்கும் பழக்கம், தமிழகத்தில் அதிகரித்தது. அவை பெரும்பாலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தான் வைக்கப்படும்.இந்நிலையில், கடந்த மாதம், சென்னையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இதையடுத்து, பேனர் கலாசாரத்திற்கு எதிராக, மக்கள் குரல் எழுப்பினர்.மீண்டும் மவுசுசென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் பேனர் வைக்க தடை விதித்தது. இதற்கு, அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பேனர் முக்கியத்துவம் பெற்றதை தொடர்ந்து, சுவர் விளம்பர ஓவியங்கள், காகித போஸ்டர்களுக்கு, 'மவுசு' குறைந்தது. இதனால், சுவர் விளம்பரம் வரையும் கலைஞர்கள், வருவாய் இழந்து, மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். பலர், சுவர் ஓவியம் தொழிலில் இருந்து விலகி, வேறு தொழில்களுக்கும் சென்று விட்டனர்.இந்நிலையில், தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், சுவர் விளம்பரத்துக்கு, மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது.பறிபோனதுகுறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், திரைப்படம், அரசியல், வணிக நிறுவனங்கள் என, பல தரப்பினரும் அனுமதி பெற்று, சுவரில் ஓவியங்கள் வரைய, 'ஆர்டர்' கொடுத்துள்ளனர்.வாழ்வாதாரம் இழந்திருந்த சுவர் ஓவியர்கள், மீண்டும் பழைய தொழிலுக்கு திரும்பி வருகின்றனர். இது குறித்து, திருவரங்குளத்தைச் சேர்ந்த, ஓவியர் முருகேசன் கூறியதாவது:கணினி வளர்ச்சி காரணமாக, விளம்பர ஓவியர்களின் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து போனது. பேனர் வந்த பின், முற்றிலும் வேலைவாய்ப்பு பறிபோனது.தற்போது, பேனர் தடை எதிரொலியால், ரசிகர்களை கவர்வதற்காக, சினிமா விளம்பரங்கள் வரையும் பணிகளை, திரைத் துறையினர் வழங்கியுள்ளனர்.மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பிற துறையினர், சுவர் விளம்பர ஓவியர்களுக்கு பணிகள் வழங்கி, ஓவியக்கலை வளர ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்