தீபாவளியையொட்டி ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுடைய பெற்றோர்களுக்கு தனித்தனியே வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனர்

தீபாவளியையொட்டி மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு கடிதம் வழியே தங்களது வாழ்த்துகளை அனுப்பினர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு கடிதம் வழியாக தொடர்பு கொள்வது குறைந்துவிட்டது. இந்நிலையில் கடித போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக மதுரையில் உள்ள தனியார் பள்ளி குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி வாழ்த்து அட்டைகளை தபால் நிலையங்கள் வழியே அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுடைய பெற்றோர்களுக்கு தனித்தனியே வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனர், கடித போக்குவரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர், 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு