மது விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை: தங்கமணி

தீபாவளியை முன்னிட்டு மது விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை, என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றது 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்றார். வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யப்பட வில்லை. இலக்கு குறித்து வெளியான செய்தி தவறான செய்தி. தமிழக அரசின் கொள்கை மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பின் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். அதிமுகவில் சசிகலா இணைவது தொடர்பாக கேட்ட கேள்விக்கு அதிமுகவையும், ஆட்சியையும் முதலமைச்சரும் ,துணை முதல்வரும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா நினைத்தது போல் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகின்றனர் வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்றா


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)