குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாத்மா காந்தி சிலையை மணிலாவில் திறந்து வைத்தார்.

காந்தியின் 150 ஆவது ஆண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசும் நாடு முழுவதும் இதற்கான விழாவை மிக விமர்சையாக நடத்தி வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஐந்து நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், மணிலாவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்