சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆழ்துளை கிணறு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு உயிர்ப்பலி கொடுக்க வேண்டுமா என்றும் கண்டித்துள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உதவியாளர் பொன் ராஜ். இவர் , ஆழ்துளை கிணறு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று (29 ம்தேதி ) நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷாயி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசிடம் விளக்கம் கேட்டனர். விதிகளை மீறி எத்தனை ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன? இவ்வாறான தவறுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அனுமதி கொடுத்தால் இதன் ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா ? பயன்படுத்தாமல் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளது? இதன் நிலை என்ன ? எத்தனை மூடப்பட்டது ? மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அரசு நடவடிக்கை எடுப்பதற்கு, சுஜித்தை போன்று உயிர்ப்பலி கொடுக்க வேண்டுமா ? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்