விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை தடுக்கும் வகையில், ரோந்து பணியை தீவிரப்படுத்த, போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

தீபாவளி நாளில், விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை தடுக்கும் வகையில், ரோந்து பணியை தீவிரப்படுத்த, போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கடந்த, 2018ல், பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, தீபாவளி நாளில், இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.அனுமதிஇதில், கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், 'இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். 'அந்த நேரத்தை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை ஏற்று, 2018ல், தீபாவளி நாளில், காலை, 6:00 முதல், 7:00 மணி வரையும், மாலை, 7:00 முதல், 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, பட்டாசு வெடித்தோர் என, 1,000க்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.மேலும், காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு, 1 கன மீட்டருக்கு, 100 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். 2018 தீபாவளி நாளில், நுண் துகள்கள், 48 முதல், 114 மைக்ரோ கிராமாக இருந்தன. அதேபோல், ஒலி மாசு அளவு, 68 முதல், 89 டெசிபல் அளவில் இருந்தது. இந்த காற்று மற்றும் ஒலி மாசு அளவு, கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், 2018ல், குறைந்து காணப்பட்டதாக, மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துஇருந்தது.எனவே, இதே நடைமுறையை இந்தாண்டும் பின்பற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Advertisement


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்