15 மாதங்களாக தண்ணீரில் கிடந்த ஐபோன்... உரிமையாளருக்கு இன்ப அதிர்ச்சி...!

ஓராண்டுக்கு முன் நதியில் விழுந்த ஐபோனை யூடியூபர் ஒருவர், கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக பதிவிட்ட வீடியோவை அதிகம் பேர் பார்த்து வருகின்றனர். நக்கட்நாகின் nuggetnoggin என்ற பெயரில் 7 லட்சத்து 42 ஆயிரம் பின் தொடர்பாளர்களுடன் இயங்கி வரும் யூ டியூப் சேனல் நடத்தி வருபவர் மைக்கேல் பென்னட்(Michael Bennet). பொக்கிஷத் தேடல் என்ற பெயரில் 12 வயதில் பெற்றோர் தன் பிறந்த நாளுக்கு பரிசளித்த மெட்டல் டிடெக்டர் கொண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள எடிஸ்டோ (Edisto) நதியில் தேடலில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கெனவே மோதிரம் ஐபோன் உள்ளிட்டவற்றை எடுத்த மைக்கேல், அதன் உரிமையாளர்களைத் தேடி வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி அவர் பதிவேற்றிய வீடியோ ஒன்றில் ஐபோன் ஒன்றை நதியில் இருந்து எடுத்ததாகவும், பயன்பாட்டில் இருந்தாலும் பாஸ்வேர்ட் போடப்பட்டிருந்ததால் சிம் கார்டை கழற்றி, வேறு போனில் போட்டு பயன்படுத்தி அதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் பெயர் எரிகா பென்னட் (Erica Bennett) எனத் தெரிவித்ததோடு கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி குடும்பத்தினருடன் சென்றபோது நதியில் தொலைத்ததாகவும் பதிலளித்ததாகக் கூறியுள்ளார். அந்த ஐபோன் உரிமையாளர் எரிகாவிடம் ஒப்படைத்ததாகவும் மைக்கேல் குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்