இனி 'நல்லகாலம்':விவசாயிகளுக்கு சட்டம் இயற்றியது தமிழக அரசு

சென்னை: விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியா முழுவதும், போதிய வருமானம் மற்றும் விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்து வருகிறது. விவசாயத்தை நம்பி வாங்கிய கடனும் வருமானம் இல்லாததால், கட்டத் தவறி குடும்பமே சிக்கலில் தவிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல மாநில அரசுகளும் முயன்று வந்தன. தமிழக அரசு ஒருபடி மேலே சென்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். * கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும். * ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்டப் பாதுகாப்பு. * அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்கான சட்டம். * வேளாண் பொருள் கொள்முதலாளர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)