சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூன்றடைப்பு, மறுகால் குறிச்சி, வடக்கு விஜயநாராயணம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்த திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கனவு காண்பதாகவும், எந்த காலத்திலும் முதல்வராக வர அவர் சரிப்பட்டு வரமாட்டார் எனவும் விமர்சித்தார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தளபதி சமுத்திரம், பொன்னாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், ஊழல், லஞ்சம், கொள்ளையடித்தலில் அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை வாங்கியிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தில் பாதுகாப்பு சரியில்லை என்பதால்தான், சீன அதிபர் வருகையின் போது சீனாவில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்தனர் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு திட்டத்தை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, 2020க்குள் பணிகள் முடிந்துவிடும் என முதல்வர் பொய் வாக்குறுதி கொடுப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)