தி.மு.க.தலைவர் ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி:முதல்வர்

திருச்சி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசுகிறார். என முதல்வர் பழனிசாமி கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துழைகிணற்றில் விழுந்து பலியானான். சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வர் நிவாரண நிதியாக தமிழக அரச சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க.,சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எல்லாம்தெரிந்த விஞ்ஞானியை போல் பேசுகிறார். வேண்டுமென்றே அரசு மீது தவறான எண்ணத்தை பரப்புகிறார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் ,மாநில பேரிடர் மீட்பு படையினர் உட்பட அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிறந்த நிபுணர்களை கொண்டு மீட்பு பணிகளை மேற்கொண்டோம். அவர்களின் முயற்சி பலனளிக்காததால் குழந்த பலியானது. அனைவரையும் மீட்பது தான் அரசின் எண்ணம். ஆழ்துறை கிணறு விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பணியில் மெத்தனம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு பொய்யானது. 2009 -ல் நிகழ்ந்த இது போன்ற சம்பவத்தில் தி.மு.க., ஏன் ராணுவத்தை அழைக்க வில்லை. அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். என முதல்வர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்