வீட்டுக்கு வீடு துளசிச்செடி வளர்க்க வேண்டும்

திருச்சி எலைட் சிறப்புப் பள்ளியில் துளசிச்செடி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் துளசிச் செடிகளை வழங்கி பேசுகையில், ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கவேண்டும். அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை ஆகும். இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டி போதுமானது. துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது. எனவே அனைவரும் வீட்டுக்கு வீடு துளசி வளர்க்க வேண்டும் என்றார். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)