ஆபாச வீடியோ அனுப்பிய காவல் உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூரில் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய காவல் உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜமாணிக்கம் இவர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பெண்ணிடம் வாகன தணிக்கையின் போது அவருடைய தொலைபேசி தொடர்பு எண்ணை பெற்று அந்தப் பெண்ணுக்கு நள்ளிரவில் ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார். இதனை அந்தப் பெண் அவரது உறவினரான அமமுக கட்சியில் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பு பால் பாலாஜி சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை ஆட்களுடன் சென்று அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுரோட்டில் ஆபாச வீடியோ அனுப்பிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி மிரட்டி உள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி ஆய்வாளரை ஆயுதப்படை பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேலூர் மையப்பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரை ஆபாச வீடியோ அனுப்பியதை நடுரோட்டில் கேட்டது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது