கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில்நிலையத்தில் பார்சல் ஒன்று வெடித்ததில், ஒருவர் காயமடைந்தார்.

தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள ஹூப்ளி ரயில் நிலையத்தில், யாரும் பெற்றுச்செல்லாத பார்சல் ஒன்று இருந்துள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அந்த பார்சலை ஹுசைன் சாப் நாயக் வாலே என்ற நபர் பிரிக்க முயன்ற போது அந்த பார்சல் வெடித்துள்ளது. இதில் அருகிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில், பார்சலை பிரித்த ஹுசைனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த ரயில்வே பாதுகாப்பு படையினர், பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு