வாடிக்கையாளர்கள் அச்சம் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள் தோல்வி ஆவதாக வதந்தி பரவல்:

ஆயிரக்கணக்கான தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வியடைந்தது. இதனால் சமூக வலைதளங்களில் வங்கிகள் குறித்த வதந்தி பரவியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அச்சம் அடைந்தனர். பிஎம்சி வங்கி என அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீதான முறைகேடு புகார் காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு புதிதாக கடன் வழங்கவோ, புதிய பணிகளை மேற்கொள்ளவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க கூடாது என்றும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர், வங்கி குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு தனியார் வங்கி வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகள் திவாலாகவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. முன்னணி தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேற்று முன்தினம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக, வாடகை, பள்ளிக் கட்டணம், மற்றும் இதரக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் உடனடியாக வங்கிகளை தொடர்பு கொண்டனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “விழாக்கால சலுகையில் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் பலருக்கு தொகையை செலுத்த முடியாமல் தோல்வி ஏற்பட்டது'' என்றனர். கோடக் மகேந்திரா வங்கி செய்தி தொடர்பாளர் கூறுகையில், “எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை சமாளிப்பதற்காக கூடுதல் சர்வர்கள் அமைக்கப்பட்டது” என்றார். இதேபோல் எச்டிஎப்சி வங்கியில் காலை இதுபோன்ற பிரச்னைகள் இருந்ததாகவும், பின்னர் மாலை இது வழக்கம்போல் இயல்புநிலைக்கு திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்