வங்கியில் கடன்கள் வாங்க 21,000 போலி கணக்குகள் துவக்கம்: புலன் விசாரணையில் அம்பலம்

பஞ்சாப் அன்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) கடன்கள் வாங்கி மோசடி செய்வதற்காக மட்டும் சுமார் 21,000 போலி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் மோசடி குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள் ளது. மும்பை பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், போலி கணக்குகள் தொடங்கி வங்கியில் ரூ.4,355 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இந்த தொகை வாராக்கடனாக உள்ளது. இதனால் வங்கியின் செயல்பாடு முடங்கிவிட்டது. ஒரு தனிப்பட்ட நிறுவனம் மற்றும் குரூப் ஆப் கம்பெனிகள் மட்டும் 44 போலி கணக்குகள் மூலம் கடன்கள் வாங்கி ஏமாற்றியுள்ளன. வங்கியின் தலைவர் வாரியம் சிங், நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் அதிகாரிகள் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி, போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 5 பெரிய கூட்டுறவு வங்கிகளில் பிஎம்சி வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் மட்டும் 9 லட்சம் டெபாசிட்தாரர்கள் உள்ளனர். கடன் மோசடி புகாரைத் தொடர்ந்து வங்கியை முடக்கி வைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்