2 மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில், அவன் திருச்சியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு மாதங்கள் நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ள தகவல் தெரியவந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருவாரூரைச் சேர்ந்த பலே கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையின் போது போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன் மணிகண்டன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நான்கரை கிலோ நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். இந்த நிலையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார். இவர் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள நறுங்குழல் நாயகி நகரில், கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மனைவி, மகன், மகள் மற்றும் நாயுடன் வசித்து வந்திருக்கிறான் திருவாரூர் முருகன். ஆறாயிரம் ரூபாய் வாடகைக்கு சிறிய வீட்டை வாடகை எடுத்திருந்த அவன், பத்து மாத வாடகை தொகையான 60 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வீட்டு உரிமையாளரிடம் வழங்கி இருக்கிறார். அவர் வசிக்கும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை கண்ட கொள்ளையன் முருகன், அதனை சரி செய்ய அப்பகுதியினரிடம் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டுங்கள், மீதம் தேவைப்படும் பணத்தை தாம் தருவதாக கூறியிருக்கிறார். கொள்ளையன் முருகன் இரண்டு கார்களில் அடிக்கடி வெளியே சென்று வந்த தகவலை அக்கம் பக்கத்தினர் மூலம் போலீசார் பெற்றிருக்கின்றனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீரென குடும்பத்துனருடன் வெளியே சென்றதாக கூறப்படும் முருகன், அதன் பிறகு ஒன்றாம் தேதி வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாளான அதாவது லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 2ஆம் தேதி இரவுக்குப் முருகன் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறுகின்றனர் அப்பகுதியினர். இந்த நிலையில் கொள்ளையன் முருகன் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு ஏதும் கைப்பற்றப்பட்டதா அல்லது ஏதுல் சிக்கவில்லையா என்பது போன்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தலைமறைவாக உள்ள கொள்ளையன் திருவாரூர் முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில், அவன் திருச்சியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு மாதங்கள் நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ள தகவல் தெரியவந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருவாரூரைச் சேர்ந்த பலே கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையின் போது போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன் மணிகண்டன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நான்கரை கிலோ நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். இந்த நிலையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார். இவர் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள நறுங்குழல் நாயகி நகரில், கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மனைவி, மகன், மகள் மற்றும் நாயுடன் வசித்து வந்திருக்கிறான் திருவாரூர் முருகன். ஆறாயிரம் ரூபாய் வாடகைக்கு சிறிய வீட்டை வாடகை எடுத்திருந்த அவன், பத்து மாத வாடகை தொகையான 60 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வீட்டு உரிமையாளரிடம் வழங்கி இருக்கிறார். அவர் வசிக்கும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை கண்ட கொள்ளையன் முருகன், அதனை சரி செய்ய அப்பகுதியினரிடம் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டுங்கள், மீதம் தேவைப்படும் பணத்தை தாம் தருவதாக கூறியிருக்கிறார். கொள்ளையன் முருகன் இரண்டு கார்களில் அடிக்கடி வெளியே சென்று வந்த தகவலை அக்கம் பக்கத்தினர் மூலம் போலீசார் பெற்றிருக்கின்றனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீரென குடும்பத்துனருடன் வெளியே சென்றதாக கூறப்படும் முருகன், அதன் பிறகு ஒன்றாம் தேதி வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாளான அதாவது லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 2ஆம் தேதி இரவுக்குப் முருகன் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறுகின்றனர் அப்பகுதியினர். இந்த நிலையில் கொள்ளையன் முருகன் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு ஏதும் கைப்பற்றப்பட்டதா அல்லது ஏதுல் சிக்கவில்லையா என்பது போன்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தலைமறைவாக உள்ள கொள்ளையன் திருவாரூர் முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்