சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையிலான பசுமை பட்டாசுகள் சிவகாசியிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன

தீபாவளி என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசுகள். இந்த ஆண்டு புதிய வரவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையிலான பசுமை பட்டாசுகள் சிவகாசியிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளன.பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் அதிக சத்தம், கரும்புகை ஆகியவற்றால் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வந்த நிலையில், சூழலுக்கு அதிக கேடு விளைவிக்காத பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கவேண்டும் என்றும், அதிக மாசு ஏற்படுத்தும் பேரியம் என்ற ரசாயனத்தை பயன்படுத்தவும் தடை விதித்தது.இந்நிலையில் பசுமை பட்டாசுக்கு விளக்கம் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள், சுமார் 3 மாதங்களுக்கு மேலாக பட்டாசு ஆலைகளை மூடினர். இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக நிபுணர்கள், பலகட்ட சோதனைக்குப்பிறகு பேரியம் நைட்ரேட் அளவைக் குறைத்து, ஜியோ லேட் உள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை சேர்க்கும் பட்டாசு தயாரிப்பு முறையை உருவாக்கிக் கொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து, சிவகாசி ஆலைகளில், புகை மற்றும் சத்தம் குறைந்த வானில் சென்று வெடிக்கும் பேன்ஸி ரக பைப் வெடிகள், சங்கு சக்கரம், பூச்சட்டி, கம்பி மற்றும் சாட்டை மத்தாப்புகள் போன்ற பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பசுமைப் பட்டாசுகளுக்கான ரசாயன பொருட்கள் மலிவாகவும், எளிதில் கிடைப்பதால் கடந்த ஆண்டுகளை காட்டிலும், பட்டாசுகள் 10 சதவீதம் விலை குறைந்து இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.இந்த தீபாவளிக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து விதவிதமான பட்டாசுகளை மொத்தமாக வாங்கிச்செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு