அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் உருக்கமான கடிதம்..

நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை. கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம் கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை. மருத்துமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது. எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது. மனதை தேற்றி கொள்கிறேன். ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை.... சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்.. டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)