புதுடில்லிக்கு வர வேண்டாம் என, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை: குறைகளை தீர்க்க, மண்டல அலுவலகத்தை அணுகலாம்; புதுடில்லிக்கு வர வேண்டாம் என, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் உள்ள பள்ளிகளில், தேர்வுகள், பாட திட்டம் தொடர்பாக, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை தீர்த்துக் கொள்ள, ஒவ்வொரு பள்ளியின் சார்பிலும், சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலகங்களுக்கு, புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், மண்டல அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும், மாணவர்கள் தரப்பிலும், புதுடில்லியில் உள்ள, சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்திற்கு, புகார்கள் அனுப்புகின்றனர். பலர், அங்கு நேரில் செல்வதால், நிர்வாக பணிகள் பாதிக்கப்படுவதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து மண்டல அதிகாரிகளும், தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளின், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். எந்த புகாரையும் புறக்கணிக்கக் கூடாது. பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தரப்பில், புகார்கள் இருந்தால், அவற்றை புதுடில்லி அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. மண்டல அலுவலகங்கள் அவற்றைப் பெற்று, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மண்டல அலுவலங்கள் தரப்பில், உரிய வழிகாட்டுதல் வழங்கப் பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்