செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி, எங்களைப்பற்றி குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி:''செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி, எங்களைப்பற்றி குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என, முதல்வர் நாராயணசாமி பேசினார். காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து, நேற்று மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று, ஓட்டு சேகரித்த, முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:ஓட்டு சேகரிக்க சென்றபோது, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, ஜான்குமாருக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். 13 நாட்கள் எங்களுடன் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்துள்ளனர். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காங்.,- தி.மு.க., கூட்டணி சிறப்பான ஆட்சி செய்து வருவதாக கூறி உள்ளார்.எதிர்க்கட்சி வேலை செய்யாமல், எதிரி கட்சி வேலையை செய்து வருகிறார். அவருக்கு மக்களைப் பற்றி கவலையில்லை, கவர்னர் முட்டுக்கட்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். சட்டசபையில் மக்கள் பிரச்னையை பேச வருவதில்லை. அவருடைய ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டன. அவரது ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூன்று முறை மத்திய அரசுக்கு சென்றும் நிராகரிக்கப்பட்டது. காங்., கூட்டணி ஆட்சி வந்த பிறகுதான் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்தது.எங்கள் ஆட்சியில் பல துறைகளில் முன்னேறி உள்ளோம். இதெல்லாம் தெரிந்தும், செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி, எங்களைப் பற்றி குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் ஆட்சியில் முதியோர், விதவைத்தொகை சரியான நேரத்தில் கொடுக்கப்படவில்லை. எங்கள் ஆட்சியில் மாதந்தோறும் கொடுத்து வருகிறோம். சென்டாக் மாணவர்களுக்கு கல்வித் தொகை முறையாக கொடுக்கப்படுகிறது. சமூக நலத்திட்டம் முறையாக செயல்படுத்தப் படுகிறது.மில் தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள், பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். மத்திய அரசு நிதி தராமல் இருந்தால்கூட மாநில வருவாயை பெருக்கி, திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.இலவச அரிசி திட்டம், கவர்னர் முட்டுக்கட்டை போடுவதால் கால தாமதம் ஏற்படுகிறது. எங்கள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக, கவர்னர் இதுபோல தொடர்ந்து செய்து வருகிறார்.கவர்னர் முட்டுக்கட்டை போடுவதால் நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றுவந்துள்ளோம். அதையும் அவர் மதிப்பதில்லை.இதையெல்லாம் மறைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்துகிறார். வைத்திலிங்கம் எம்.பி., இத்தொகுதியில் செய்துள்ள பணிகளை, மக்கள் பாராட்டுகின்றனர். இதுவே எங்கள் பலம். ஜான்குமாரை சிறந்த சமூக சேவகர் என்று அங்கீகரித்துள்ளனர். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார்.ஸ்டாலின் சொன்னது 100க்கு 100 உண்மை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)