உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழு..

சென்னை திருநின்றவூரில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருநின்றவூரில் செயல்படும் உணவகத்திற்கு சென்ற ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் இருந்த இறைச்சி துண்டில் புழுக்கள் இருந்ததை கண்டு அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, உணவக நிர்வாகத்திடம் அவர் கேட்டபோது முறையான பதில் வழங்காததால், புழுக்கள் இருந்த உணவை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார். இது குறித்து உணவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தின் மீது எந்த தவறும் இல்லை என மறுத்த நிர்வாகம் தாங்கள் எப்போதும் கோழிக் கறி வாங்கும் கடை மீது தான் தவறு எனக்கூறி அந்த கோழிக் கடை மீது புகார் அளித்துள்ளது. உணவுப் பொருட்களில் இதுபோன்று புழுக்கள் இருப்பது உணவுப் பிரியர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்