நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு....

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாங்குநேரி சட்டப்பேரவை வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. எனினும், மழை காரணமாகவும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் தேர்தல் புறக்கணிப்பு காரணமாகவும் வாக்குப் பதிவு மந்தமாக உள்ளது. தேவேந்திர குல வேளாளர்கள் அதிகம் வசிக்கும் 63 கிராமங்களில் அந்த சமூக மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களை பட்டியல் இன பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உன்னங்குளம், அம்பலம், ஆயர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு மிக மிக குறைவாகவே பதிவாகியுள்ளது. எனினும், ரெட்டியார்பட்டி, கே.பி.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில், காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி, 139 மையங்களாக பிரிக்கபட்டு 275 வாக்கு பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்குகளை அளித்து வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியின் பாதுகாப்புக்காக, 3 துணை ராணுவ படையினர், தமிழக காவல்துறையினர் என 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 118 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பதற்றமான 82 வாக்குசாவடிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. தொகுதியில் உள்ள 3 ஆயிரத்து 286 மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏற்ப, சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஆயிரத்து 917 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)