அமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்!

சீன அதிபரை சந்திக்க சென்னை வந்த மோடியை யார் யார் ஏர்போர்ட்டில் வரவேற்பது என்று தீர்மானித்தவர் முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தான் என்று கூறிவருகின்றனர். கட்சியின் பல பிரிவு பிரமுகர்களுக்கும் அனுமதி வழங்கிய பொன்னார், தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் ஆதரவாளர்களான மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, அரசகுமார், இளைஞரணிச் செயலாளர் வினோஜ் உள்ளிட்ட எவரையும் அனுமதிக்கலை என்று அக்கட்சி வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் அமித்ஷாவரை சென்றுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரிக்கும்படி, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. இதைத் தொடர்ந்து, பிரதமரை வரவேற்றவர்களின் பட்டியலை யார் தயாரித்தது? சீனியர் தலைவர்களின் பெயர்கள் இதில் எப்படி விடுபட்டது? கட்சியைச் சாராத பிரபலங்கள் பலரும் பிரதமரை வரவேற்கும் பட்டியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பரிந்துரைத்தது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளோடு தமிழக பா.ஜ.க. பிரமுகர்களை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார் நட்டா.இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பாஜக தலைவர் பதவி கொடுக்கும் நேரத்தில் இப்படி புகார்கள் சென்றுள்ளது கட்சியினரை அதிர வைத்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)