சென்னைபள்ளிக்கரணையை அடுத்த சித்தாலபாக்கம் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமலதாவுக்கு கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டதால், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்ததால், அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹேமலதா உயிரிழந்ததை தொடர்ந்து அவரது வீட்டைச்சுற்றி இருந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அவசர அவசரமாக அள்ளினர். சுகாதார சீர்கேட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்ததே ஹேமலதா உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பண்ருட்டியில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய வகையில் சுகாதார சீர்கேடாக இருந்த வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டெங்கு காய்ச்சல் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வணிக நிறுவனங்களில் டெங்குவை பரப்ப கூடிய டெங்கு கொசுக்கள் இருந்ததால் அவர்களுக்கு அபராதம் விதித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு