தேசிய ஒருமைப்பாடு தின விழா திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில்

திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கடைபிடிக்கப்பட்டது பள்ளித் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட்தாஸ் தலைமை வகித்தார் அமிர்தம் சமூக அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தேசிய ஒருமைப்பாடு தினத்தை குறித்து மாணவர்களிடையே பேசுகையில், இந்திய திருநாட்டின் சுதந்திரத்துக்குப்பின் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமைக்குரியவர் வல்லபாய் படேல். 'இரும்பு மனிதர்' என போற்றப்படும் இவரது பிறந்த தினம், அக்., 31ல் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படுகிறது. குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நாடியாத் கிராமத்தில் 1875, அக், 31ல் விவசாய குடும்பத்தில் படேல் பிறந்தார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார். 'பாரிஸ்டர்' பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக சக மாணவர்களிடம் புத்தகங்களை கடன் வாங்கி படித்தார். இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். ஆமதாபாத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.விடுதலை உணர்வுபின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். காந்திஜியின் உப்பு சத்யாகிரக போராட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார். ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன், மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் துாக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்., கட்சி தலைவரானார். 1942, ஆக.,9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல் விடுதலையானார். ஒரே குடையில் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்த படேலிடம்ஒப்படைக்கப் பட்டது. பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார். ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்தார். 1950, டிச. 15ல் காலமானார். மறைவுக்குப்பின் 1991ல் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமர் மோடியின் முயற்சியால், குஜராத்தின் சர்தார் சரோவர் அணை அருகே, உலகின் மிக உயரமான சிலை 2018 அக்., 31ல் 597 அடி உயர சிலை திறக்கப்பட்டது.நாட்டின் பாதுகாப்பு ஒருமைப்பாடு இறையாண்மை ஆகியவற்றை பேணிக்காக்கும் விதத்தில் அக்டோபர் 31 ஆம் தேதியை ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடித்து வருகிறோம் என்றார்.இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என உளமாற உறுதியளிக்கிறேன் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என உளமாற உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்