சுஜித் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதுடில்லி: திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் நலமுடன் திரும்ப தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் சுஜித் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார். திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த அக்.,25ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தையான சுஜித் விழுந்தான். குழந்தையை மீட்பதற்காக 70 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். பல முயற்சிகள் தோல்வியுற்றாலும், 'ரிக்' இயந்திரம், போர்வெல் போன்றவற்றை கொண்டு ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நாடு முழுவதும், பல்வேறு மதத்தினரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்;எனது பிரார்த்தனைகள் இளம் மற்றும் தைரியமான சுஜித் வில்சனுடன் உள்ளன. சுஜித்தை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பேசினேன். அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் இது குறித்து முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுஜித்தை மீட்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் 3 அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி., ஓ.என்.ஜி.சி., எல்.அண்ட்.டி., மற்றும் என்.ஐ.டி. நிபுணர்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டுள்ளனர். அதிநவீன துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணி தொடர்கிறது. தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும். இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)