மக்கள் போராட்டம் எதிரொலியாக லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகும். கல்வி, மருத்துவம் என அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அந்நாட்டு அரசு குறைத்ததால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு மக்கள், கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளை மறித்தும், டயர்களை எரித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது அந்நாட்டு போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும், மக்களின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் அந்நாட்டு அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் ஹரிரி, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான பதவி விலகல் கடிதத்தை, அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுனை சந்தித்து அளித்தார். இது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அந்நாட்டு மக்கள் கருதி கொண்டாடி வருகின்றனர். எனினும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் நீடிக்கும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!