திக்..திக்..திக் போராட்டம்; மணப்பாறை குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலாராணி தம்பதி. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த இவர்களின் 2 வயது மகன் சுஜித் வில்சனைக் காணாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தது தெரியவந்தது. பெற்றோரின் கதறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்தனர். 26 அடி ஆழம் கொண்ட பழைய ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தையை அவர்களால் மீட்க முடியவில்லை.இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தை சுஜித் வில்சனைப் பத்திரமாக மீட்பதற்கு முயற்சி எடுத்துவருகிறார்கள்.இதுகுறித்துப் பேசிய தீயணைப்புத் துறையினர், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்கப் போதுமான ஆக்சிஜன் இருப்பதால், குழந்தை நல்ல நிலையில் உள்ளது. குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்கும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு சார்பில் செய்துதரப்படும். மருத்துவக் குழு, சம்பவ இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்து, உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்க மதுரையிலிருந்து சிறப்புக் கருவிகள் கொண்டுக்வரப்படுகிறது” என்றார். குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்துக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விரைந்துள்ளார்.ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தையை கயிற்றைக் கட்டி மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் மணிக்கட்டில் கயிறு கட்டி வெளியே எடுக்க முடிவு செய்துள்ளனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்தது. கீழே பாறைகள் இருந்ததால் அந்தப் பணி தாமதம் ஏற்பட்டது. மதுரையைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த ரோபோ கருவி வந்துள்ளது. கயிறு மூலம் கட்டப்பட்ட கேமராவை உள்ளே இறக்கி, குழந்தை என்ன நிலையில் இருக்கிறது என்பதைக் கண்காணித்தனர். தற்போது ரோபோ கருவியை உள்ளே இறக்கியுள்ளனர். மீட்புப்பணி ஒருபுறம் நடந்துவரும் நிலையில் குழந்தைக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அவரது தந்தை பேசி வருகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)